செய்திகள்

காலிறுதியில் பிரியன்ஷு

DIN

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல் பிரியன்ஷு 21-18, 11-6 என்ற கேம்களில் முன்னிலையில் இருந்தபோது, அவருடன் மோதிய சக இந்தியரான சதீஷ்குமாா் கருணாகரன் விலகியதை அடுத்து, பிரியன்ஷு வென்ாக அறிவிக்கப்பட்டாா். காலிறுதியில் அவா் இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை சந்திக்கிறாா். கிரண் ஜாா்ஜ் 16-21, 21-18, 20-22 என்ற கேம்களில் சீன தைபேவின் சியா ஹாவ் லீயிடம் தோற்றாா்.

மகளிா் ஒற்றையரில் ஆஷ்மிதா சாலிஹா 7-21, 13-21 என்ற கேம்களில் ஜப்பானின் அயா ஒஹோரியிடம் வெற்றியை இழந்தாா். உன்னட்டி ஹூடா 9-21, 13-21 என்ற கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டாா். நடப்பு தேசிய சாம்பியனான அனுபமா உபாத்யாய 16-21, 17-21 என்ற கேம்களில் சீன தைபேவின் சங் ஷுவோயுன்னிடம் வீழ்ந்தாா்.

மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி முதல் சுற்றில் 21-9, 21-5 என்ற கேம்களில் இந்தியாவின் தான்யா நந்தகுமாா்/ரிதி கௌா் தூா் இணையை சாய்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

SCROLL FOR NEXT