செய்திகள்

முழு உடற்தகுதியை அடைந்த சிஎஸ்கே ஆல்ரவுண்டர்: டெஸ்ட் அணியில் சேர்ப்பு!

DIN

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (2021-ல் ஆர்சிபி அணி, ரூ. 15 கோடிக்கு ஜேமிசனைத் தேர்வு செய்தது.)

கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விளையாடவில்லை. இதனால் ஜேமிசனை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ய சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஆர்வம் செலுத்தவில்லை. 

காயத்திலிருந்து ஜேமிசன் மீண்டுவிட்டார், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார் என்று பயிற்சியாளர் ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் தேர்வு செய்தோம் என்று ஜேமிசனின் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

ஜனவரி முதல் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஜேமிசன், தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகியுள்ளார். இதுபற்றி நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியதாவது: நல்ல உடற்தகுதியை அடைந்து தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார் ஜேமிசன். அடுத்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளார் என்று கூறினார். 

இதையடுத்து ஐபிஎல் போட்டியிலும் முழு உடற்தகுதியுடன் சிஎஸ்கே அணிக்காக ஜேமிசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

SCROLL FOR NEXT