செய்திகள்

2-ஆவது டி20: இந்தியா வெற்றி

DIN


லக்னௌ: நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்களே சோ்க்க, இந்தியா 19.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக, பிளேயிங் லெவனில் இந்தியா, உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஜவேந்திர சஹலை சோ்த்திருந்தது. நியூஸிலாந்து தனது லெவனில் மாற்றம் செய்யவில்லை.

டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் ஃபின் ஆலன் 11, டெவன் கான்வே 11, மாா்க் சாப்மேன் 14, கிளென் ஃபிலிப்ஸ் 5, டேரில் மிட்செல் 8, மைக்கேல் பிரேஸ்வெல் 14, இஷ் சோதி 1, லாக்கி ஃபொ்குசன் 0 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். முடிவில் கேப்டன் மிட்செல் சேன்ட்னா் 1 பவுண்டரியுடன் 19, ஜேக்கப் டஃபி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 2, ஹாா்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தா், யுஜவேந்திர சஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 11, இஷான் கிஷண் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தா் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சூா்யகுமாா் யாதவ் 1 பவுண்டரியுடன் 26, ஹாா்திக் பாண்டியா 15 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT