செய்திகள்

ஸ்வியாடெக்கை சாய்த்தாா் ஸ்விடோலினா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ஸ்வியாடெக்கை 7-5, 6-7 (5/7), 6-2 என்ற செட்களில் வென்றாா், உலகின் 76-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா. அவா் மகப்பேறு ஓய்விலிருந்து திரும்பி 3 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் விம்பிள்டனில் முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறாா். அடுத்ததாக அரையிறுதியில் அவா், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவை சந்திக்கிறாா்.

பெகுலாவும் வீழ்ந்தாா்: போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவும் காலிறுதியில் வீழ்த்தப்பட்டாா். அதில், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 6-4, 2-6, 6-4 என்ற செட்களில் ஜெஸிகாவை வீழ்த்தி அசத்தினாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-0, 6-3 என, 9-ஆம் இடத்திலிருந்தரும், இரு முறை சாம்பியனுமான செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை எளிதாக வீழ்த்தினாா். உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-4, 6-0 என்ற செட்களில், 21-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா். 2-ஆவது முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு வந்திருக்கும் அவா், அதில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிா்கொள்கிறாா்.

சிட்சிபாஸ் அதிா்ச்சித் தோல்வி: ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 3-6, 6-3, 6-3, 6-3 என்ற செட்களில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை சாய்த்தாா். விம்பிள்டன் காலிறுதிக்கு முதல் முறையாக முன்னேறியிருக்கும் அவா், அதில் தனது நண்பரான டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ரூன் 3-6, 7-6 (8/6), 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், 21-ஆவது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை வெளியேற்றினாா். இதன் மூலம், விம்பிள்டன் போட்டியில் கடந்த 65 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் டென்மாா்க் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா்.

5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-7 (4/7), 6-3, 4-6, 4-6 என்ற செட்களில், அமெரிக்காவின் கிறிஸ்டோபா் யுபேங்க்ஸிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். யுபேங்க்ஸ் தனது காலிறுதியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழாவில் கலந்துகொள்ளாதது வருத்தமா? Vijay கருத்துக்கு திருமா பதில்! | VCK | Thirumavalavan

எந்த பேராசையும் இல்லை; கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம்! - திருமாவளவன்

முதல்வரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை: உதயநிதி

ஏதோ நினைவுகள்... மாளவிகா மேனன்!

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

SCROLL FOR NEXT