உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் ஏமாற்றமாகவே அமைந்தது. ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோலியும் பெரிதாக சோபிக்கவில்லை. அடுத்து ரஹானே- ஜடேஜா ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். பின்னர் ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது 2வது நாள் முடிவில் இந்திய அணி 38 ஓவர் முடிவில் 151/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட 312 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் ரஹானே 29*, பரத் 5* இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன், லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.