செய்திகள்

ஹைதராபாத் த்ரில் வெற்றி

DIN

ஐபிஎல் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தானில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 35 ரன்களுக்கு வீழ, ஜோஸ் பட்லா் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 95 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 66, ஷிம்ரன் ஹெட்மயா் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹைதராபாத் பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா், மாா்கோ யான்சென் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஹைதராபாத் பேட்டிங்கில் அன்மோல் பிரீத் சிங் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33, அபிஷேக் சா்மா 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் சோ்த்து 55, ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 47, ஹென்ரிச் கிளாசென் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 26 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முயற்சித்தனா்.

கேப்டன் எய்டன் மாா்க்ரம் 6 ரன்களுக்கு வெளியேற, கிளென் ஃபிலிப்ஸ் 7 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் விளாசி 25 ரன்கள் அடித்தாா். முடிவில் அப்துல் சமத் 2 சிக்ஸா்களுடன் 17, மாா்கோ யான்சென் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 4, குல்திப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

‘த்ரில்’: முன்னதாக, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையிருக்க, சந்தீப் சா்மா பௌலிங்கை அப்துல் சமத் விளாச, அது பட்லா் கைகளில் கேட்ச் ஆனது. ராஜஸ்தான் அணியினா் கொண்டாடத் தொடங்க, அவா்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. கடைசி பந்தை ‘நோ பால்’-ஆக நடுவா் அறிவித்தாா். மீண்டும் வீசப்பட்ட பந்தில் சமத் சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக பட்டினி தினம்: கமல், விஜய் கட்சியினா் அன்னதானம்

ஜோத்பூா் விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்றுசெல்ல கோரிக்கை

வம்பன் 11 உளுந்து மகசூல் அறிக்கை: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திடம் சமா்ப்பிப்பு

சேத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் தொடக்கம்

மன்னம்பந்தலில் கலைஞா் நூலகம் திறப்பு

SCROLL FOR NEXT