ஐபிஎல் தொரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இரண்டு சிறந்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது. இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டிதான் ஐபிஎல்-ல் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்.
நான் உண்மையிலேயே இந்த சிறந்த தொடரை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி. நோ யூ டர்ன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடி 139 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்கி அவர் விளையாடி வருகிறார். ஏற்கெனவே ஒரு முறை ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராயுடு பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.