இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் ஆஸ்திரேலிய அணி 18 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காத ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாா்க் இந்தத் தொடரில் இடம் பிடித்திருக்கின்றனா். 3 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடா் செப். 24, 28, அக். 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, நேதன் எலிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சா் ஜான்சன், மாா்னஸ் லபுசான், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீா் சங்கா, மேத்யூ ஷாா்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வாா்னா், ஆடம் ஸாம்பா.
அக்ஸா் இல்லை?: இதனிடையே, ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரா் அக்ஸா் படேல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதலிரு ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதேவேளையில், காயத்திலிருந்து மீண்டுள்ள ஷ்ரேயஸ் ஐயா் அதில் களம் காண வாய்ப்புள்ளது.