செய்திகள்

பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்துள்ளது.

DIN

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23  ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் 34 ரன்களும், அலெக்ஸ் கேரி 28 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 24 ரன்களும் எடுத்தனர். 

நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் ,வாண்டர் மெர்வி, பாஸ்-டி-லீட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷரிஸ் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதோ நினைவுகள்... மாளவிகா மேனன்!

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்புக்கும் வந்துவிட்டது மோசடி கும்பல்! எச்சரிக்கை, எதற்காகவும் ஓ.டி.பி.யைப் பகிராதீர்கள்!

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

SCROLL FOR NEXT