செய்திகள்

தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 33-26 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 16 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி 16 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் மட்டும் கைப்பற்றியது.

அதிகபட்சமாக, மும்பா அணியில் ரெய்டா் அஜித் சௌஹான் 8 புள்ளிகளும், தெலுகு அணியில் கேப்டனும், ஆல் ரவுண்டருமான விஜய் மாலிக் 10 புள்ளிகளும் வென்றெடுத்தனா்.

இதனிடையே பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 32-32 என டையில் முடிய, வெற்றியாளரை கண்டறிய நடத்தப்பட்ட 5 ரெய்டில் பாட்னா 6-5 என வெற்றி பெற்றது.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT