பேரூரை அடுத்த தீத்திபாளையம் பகுதியில் கால்நடைகளைத் தாக்கிய ஒற்றை யானையை கும்கி உதவியுடன் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் இரண்டாவது நாளாக புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
கோவை வனக் கோட்டம், மதுக்கரை வனச் சரகத்துக்கு உள்பட்ட பேரூரை அடுத்த தீத்திபாளையம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை புகுந்த ஒற்றை யானை விவசாயத் தோட்டத்தில் இருந்த 3 மாடுகளைத் தாக்கியது. மேலும், ஒரு ஆட்டையும் அடித்துக் கொன்றது.
இதைத் தொடர்ந்து, சாடிவயல் முகாமிலிருந்து கும்கி பாரி வரவழைக்கப்பட்டு ஒற்றை யானையைக் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீத்திபாளையம் பகுதியில் வனத் துறையினர் முகாமிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தீத்திபாளையம் பகுதியில் கால்நடைகளைத் தாக்கிய ஒற்றை யானையானது பாரி வரவழைக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் வருவதில்லை.
அய்யாசாமி மலையின் மீது உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் அந்த ஒற்றை யானை புதன்கிழமை பிற்பகல் நடமாடி உள்ளது. எனவே, எட்டிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.