தமிழ்நாடு

சட்டவிரோத மது விற்பனை: ராமதாஸ் கண்டனம்

சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

DIN

சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தற்போது சுமார் 2,379 மதுக்கடைகள் மட்டும் தான் செயல்பட வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக வைத்துக் கொண்டால்கூட 2,879 மதுக்கடைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் குறித்து ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், "டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.29 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது அதிக எண்ணிக்கையிலான மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால் வருவாய் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளில் 50 சதவீதம் மூடப்பட்டுவிட்ட நிலையில், வருவாயும் 50 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். மாறாக, 15 சதவீதம் மட்டுமே வருவாய் குறைந்துள்ளதாகக் கூறுவது, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகளைத் தாண்டி சட்டவிரோதமாக பல இடங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது என்பதையே உறுதி செய்கிறது. எனவே, சட்டவிரோத மது விற்பனையை அரசு தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT