தமிழ்நாடு

சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை தில்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்க முயன்றதைக் கண்டித்து புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை தில்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்க முயன்றதைக் கண்டித்து புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் பத்திரிக்கையாளரை சந்திக்க வரும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த மூன்று பேர் சீதாரம் யெச்சூரியை தாக்க முயன்றனர். பின்னர் கட்சியினர், மற்றும் போலீஸார் தலையிட்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதைக் கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் முருகன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் பேச்சுரிமையை நசுக்க முயல்வதாகக் கூறி கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT