பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (54). இவர் வியாழக்கிழமை மாலை பாப்பாரப்பட்டியில் இருந்து தருமபுரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பச்சினம்பட்டியை அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரிப் பகுதியில் சென்றபோது லேசான தூறலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோர புளிய மரம் ஒன்றின் கிளை காற்றால் முறிந்து ரவியின் மீது விழுந்தது.
இதில், ரவி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தருமபுரி நகர காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.