தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா உள்பட 9 மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்கள் செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
விதிகளை மீறி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்கள் நியமிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து பசுமைத் தீர்ப்பாயம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்கள் நியமனத்தில் உரிய விதிகள் பின்பற்றவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ரத்தோர் தலைமையிலான தீர்ப்பாயம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா செயல்படத் தடை விதித்து உத்தரவிட்டது.
இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 9 மாநிலங்களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களும் செயல்படத் தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு நீடிக்கும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.