தமிழ்நாடு

தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் பி.டெக்.: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. நுழைவுத் தேர்வானது வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
கல்வித் தகுதி: இதில், கப்பல்படை அகாதெமியில் உள்ள 55 இடங்களில் சேர்க்கை பெற இயற்பியல், கணிதப் பாடங்களுடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ராணுவ அகாதெமியில் வழங்கப்படும் 335 இடங்களில் சேர்க்கை பெற பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த நுழைவுத் தேர்வில் தகுதி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் பி.டெக். படிப்பு வழங்கப்படுவதோடு, பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
ஆன்-லைன் விண்ணப்பம்: இந்த நுழைவுத் தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாகும். நுழைவுத் தேர்வானது தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 41 மையங்களில் 10-9-2017 அன்று நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2-1-1999 தேதிக்கு முன்பாகவும், 1-1-2002 தேதிக்கு பின்பாகவும் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. தேர்வு தேதிக்கு 3 வாரங்களுக்கு முன்பாக தேர்வறை நுழைவுச் சீட்டு ஆன்-லைனில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT