பண்ருட்டி: என்.எல்.சி நிறுவனத்தின் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து 20 ஆண்டுகள் முடிந்தும் பணி வாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாதவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
நெய்வேலி வட்டம் 17-ல் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு முதன்மை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே.முருகானந்தன் முன்னிலை வகித்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், குமரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், பேசிய தொகுதி ஒருங்கிணைப்பாளர்... என்.எல்.சி அப்ரண்டீஸ் படித்தவர்களுக்கு, அவர்கள் படிப்பிற்கு ஏற்றுப் பெயரில் பணி வழங்காமல், வேறு பணி வழங்குவதால், வெளியிடங்களுக்குச் சென்று பணி வாய்ப்பு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அப்ரண்டீஸ் பயிற்சியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.