தமிழ்நாடு

புதுகை அரசு மருத்துவக் கல்லூரி: இன்று முதல்வர் திறக்கிறார்

புதுக்கோட்டையில் ரூ.231.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

புதுக்கோட்டையில் ரூ.231.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மிக நீண்ட நாள் கனவான அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற உள்ளது.
புதுகை - தஞ்சை சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பகல் 12.30 மணியளவில் தொடங்கும் விழாவுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார். மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் திறந்து வைத்து அரசின் நலத் திட்டங்களை வழங்கிப் பேச உள்ளார்.
விழாவில், வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப. குமார், எ. அன்வர்ராஜா, பி.ஆர். செந்தில்நாதன், எம்எல்ஏ-க்கள் இ.ஏ. ரெத்தினசபாபதி, பா. ஆறுமுகம், பெரியண்ணன்அரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், சிறப்பு அலுவலர் கே. செந்தில்ராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT