நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாமகவுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
தமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் விவசாயம் பொய்த்து விட்டது. இதனால் தமிழகம் வறட்சி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தேசிய மயமாக்கவேண்டும். இதற்கு, பிரதமர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாமகவுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். திருச்சியில் வணிக வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை மத்திய மாநில அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 இல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.