இட மாறுதலுக்காக பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபொம்மரசனப்பள்ளியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஆர்.பாலகிருஷ்ணன் (44) பணியாற்றி வருகிறார். இவர், பாலனப்பள்ளியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் கோரி, வேப்பனஅள்ளியில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் பிரகாஷை அணுகினார்.
பணி மாறுதலுக்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என பட்டதாரி ஆசிரியரான பாலகிருஷ்ணனிடம் பிரகாஷ் வலியுறுத்தினராம். லஞ்சம் தர விரும்பாத பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப் படி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் ஆசிரியர் பாலகிருஷ்ணன், ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தைக் கொடுத்தாராம். அதை பிரகாஷ் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீஸார், பிரகாஷை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.