அரசாணை வெளியிட்ட தேதியில் இருந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் மண்ணாடிப்பட்டு தொகுதி உறுப்பினர் டிபிஆர் செல்வம் பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் வந்துள்ளது. இதனால் அதிகமான மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்கின்றனர். அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு உடனே மதிய உணவு கிடைக்க மத்திய சமையல் கூடம் அமைத்து தர வேண்டும். காட்டேரிக்குப்பம் ஆரம்ப பள்ளியை இடித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனை பார்வையிட்டு கட்டி தருவதாக கல்வி அமைச்சர் கூறினார். அதன்படி, பள்ளி கூடத்தை உடனே கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் ஒரு தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும்.
துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தினேன்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்துள்ளீர்கள். அது எந்த தேதிகளில் இருந்து வரும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: அரசாணை வெளியிட்ட தேதியில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்படும், என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.