தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை முறையாகக் கேட்டறிய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

DIN

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை முறையாகக் கேட்டறிய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சட்டப்பேரவையை முறையாக நடத்தவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏக்களுக்குப் பணம் வழங்கியதாக விடியோ வெளியான விவகாரத்தில், எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை வாக்களித்த வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.
எதிர்க்கட்சிகள் இல்லாமல் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் பலவீனத்தையே காட்டுகிறது.
எனவே, விவசாயிகள் மற்றும் மீனவர் பிரச்னை, போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகள், தடுப்பணை விவகாரம், தண்ணீர் தட்டுப்பாடு, மதுக்கடைகளை மூடுதல், பாலில் கலப்படம், பிளாஸ்டிக் அரிசி உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, அவை குறித்த தகுந்த விளக்கத்தை பேரவையில் தமிழக அரசு அளிக்க வேண்டும்.
மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஜனநாயக ரீதியாக சட்டப்பேரவையை நடத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT