ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 22,160 க்கு விற்பனையானது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் ஏற்ற, இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலை மாற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.2,770 க்கு விற்பனைச் செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 41 ரூபாய் 80 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 குறைந்து ரூ.41,800 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
ஒரு கிராம் தங்கம் 2,770
ஒரு பவுன் தங்கம் 22,160
ஒரு கிராம் வெள்ளி 41.80
ஒரு கிலோ வெள்ளி 41,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.