தமிழ்நாடு

நேரு விளையாட்டரங்கில் உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பள்ளி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

DIN

சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பள்ளி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை நேரு விளையாட்டரங்கம், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் ஆகியவற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள விளையாட்டு விடுதிக் கட்டடத்தில் கூடுதலாக தங்குமிட வசதி ஏற்படுத்தப்படும். தேசிய மாணவர் படை பயிற்சிக்காக கோவையில் வானூர்தி களம் நிறுவப்படும். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விடுதி கட்டப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT