பாஜகவைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று ஆளும்கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் பிரின்ஸ் பேசியது: தமிழகத்தில் மத்திய அரசின் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஏன் பயப்பட வேண்டும்? உங்களிடம் (அதிமுக) அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு உள்பட யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, துப்பாக்கி தோட்டாவை கழுத்தில் சுமந்த தலைவர் உருவாக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பெண்ணாக இருந்தாலும் சிங்கமாக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. அவரது பிள்ளைகளாகிய நாங்களும் யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.