பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பேரவையில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களை முடித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வாசித்து முடித்தார். இதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது ஒவ்வொருவரும் கலைந்து செல்லும் போது, பேரவையின் மையப் பகுதியில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு அருகில் சென்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.
பேரவை நிகழ்வுகள்: பேரவை நடவடிக்கைகளின் போதே, பாண்டியராஜனும் தங்க தமிழ்ச்செல்வனும் சிரித்துப் பேசியபடி இருந்தனர். அந்தக் காட்சியை பார்க்கும்படி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக் காட்டினார்.
பின்னால் திரும்பிப் பார்த்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதுபற்றி ஒன்றுமில்லை என்பதுபோல் துரைமுருகனிடம் சைகை காட்டினார். பின்னர் பாண்டியராஜனின் தோளில் கைபோட்ட தங்க தமிழ்ச்செல்வன், தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதாக துரைமுருகனிடம் சைகையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.