தமிழ்நாடு

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப் போட்டி

ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டு வரும் தமிழ் மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது.

DIN

ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டு வரும் தமிழ் மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது.
இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு அவரது வாழ்வும், உபதேசங்களும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் மற்றும் நீராதாரங்களைப் பராமரிப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பை உணர்த்தும் சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் பங்கு பெற விரும்புவோர், ஏ-4 வெள்ளைத்தாளில் 3 பக்கத்துக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும். சிறுகதைகளை அனுப்ப கடைசி தேதி ஜூலை 25-ஆம் தேதி.
முதல் பரிசு ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.8,000, 3-ஆம் பரிசு ரூ.6,000; இத்துடன் 6 பேருக்கு தலா ரூ.1,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும்.
சிறுகதைகள் ''ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31-ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004'' என்ற விலாசம் அல்லது srv@chennaimath.org, mail@chennaimath.org  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT