தமிழ்நாடு

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று கோடை விருந்து: சென்னைவாசிகள் படிக்க வேண்டாம்

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இரவு பரவலாக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் பிரதீப் கூறியுள்ளார்.

DIN

சென்னை: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இரவு பரவலாக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் பிரதீப் கூறியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  மழை பெய்யும். பல இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 

அரக்கோணம், குடியாத்தம், பள்ளிகொண்டா, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டிவனம், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும். திருநெல்வேலியில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று மாலை அல்லது இரவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி, நாமக்கல், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு இன்று கோடை விருந்துதான். திருச்சியில் மழை பெய்தால், அம்மாவட்ட மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று 108 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு ஆதங்கத்தையே ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT