சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் ரூ. 1.82 கோடி செலவில் கூரை மேல் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கும் திட்டத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., தேசிய உயர்கல்வித் திட்டம் (RUSA) நிதியுதவி ரூ. 1.82 கோடியில் கூரை மேல் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கும் திட்டத்தை ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு நிறுவனமான சேலம் Ind-Aussie சோலார் தனியார் நிறுவனத்துக்கு 200 ந்ஜ் கூரை மேல் சூரிய ஒளி ஆற்றல் அமைப்பை, தேர்வுத் துறை மற்றும் மத்தியத் தேர்வு மதிப்பீடு கட்டடக் கூரையின் மேல் தளத்தில் நிறுவ ஒப்பந்தம் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் எஸ்.மணியன் பங்கேற்று, தொடக்கி வைத்தார். ஐய்க்-அன்ள்ள்ண்ங் சோலார் தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் பாலபழனி, இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து விளக்கினார்.
பதிவாளர் கே.ஆறுமுகம், பொறியியல் புல முதல்வர் சி.ஆன்டனி ஜெயசேகர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், ரூசா ஒருங்கிணைப்பாளர் ஏ.செல்வராஜன், ரூசா உறுப்பினர் எஸ்.கபிலன், பி. பாஸ்கரன், Ind-Aussie நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் எஸ்.பாலசுப்ரமணி, திட்ட மேலாளர் சரவணகுமார், வடிவமைப்பாளர் சக்திவேல், பல்கலை. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்ததாவது: அண்ணாமலைப் பல்கலை.யின் சில இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்விப் பாடத் திட்டங்களை இந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளோம். இந்தத் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக, மாணவர் சமூகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும் உணரவும் முடியும்.
இதன் மூலம் சுத்தமான முறையில் மின் ஆற்றலைப் பெறமுடியும். இந்த மாற்று வழி மின் ஆற்றல் வளத்தின் மூலம், கணிசமான அளவு சேமிப்பைப் பெறமுடியும். பல்கலை. வளாகத்தில் இதற்கான உபகரணங்கள் அமைக்க பெரும் அளவில் இடம் இருப்பதால், பெரும் லாபம் அடையலாம். இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மின்சாரக் கட்டணக் குறைவு மற்றும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி பாடத் திட்டத்தின் மூலம் மாணவர் சமுகம், சூரிய ஒளி மின்னாற்றல் குறித்த அறிவு மற்றும் கல்வி பயன்பாட்டை அடையலாம். பல்கலை.யில் நிகழ் கல்வியாண்டில் சூரிய ஆற்றல் குறித்த தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை நேரடி மற்றும் தொலைத்துôரக் கல்வி மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது என்றார் துணைவேந்தர் செ.மணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.