தமிழ்நாடு

அனில் மாதவ் தவே மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர்

DIN

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, தேசப் பணிக்காக தன் குடும்பத்தை விட்டு முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர். முழுமையான அர்ப்பணிப்பு, சிறந்த சிந்தனை, பிரச்னையை எளிதில் புரிந்துகொண்டு தீர்வு காணுதல் ஆகியவை அவரது சிறப்பு இயல்பு.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவரின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், நம் தமிழ் சொந்தங்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT