தடம்புரண்ட எஞ்சினை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள். 
தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து

அரக்கோணம் அருகே சரக்கு ரயிலின் எஞ்சின் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சம்பவம் நடந்த பகுதி பணிமனை என்பதால் ரயில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும்

DIN

அரக்கோணம் அருகே சரக்கு ரயிலின் எஞ்சின் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சம்பவம் நடந்த பகுதி பணிமனை என்பதால் ரயில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையத்தையொட்டி, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களை துறைமுகங்களுக்கு ரயிலில் அனுப்புவதற்கான நவீன கார் ஏற்றும் நிலையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலை கார்களை அதற்குண்டான பெட்டிகளில் ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எஞ்சினை நகர்த்திய போது திடீரென சரக்கு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது. இதனால், பணிமனையில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் மனோகரன், நிலைய போக்குவரத்து ஆய்வாளர் எத்திராஜ் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, எஞ்சினை தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, கார்களை ஏற்றும் பணிகள் தொடர்ந்தன.இச்சம்பவத்தால் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT