'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்தும் இரண்டு நாள் வீட்டுமனைக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை (மே 20) தொடங்கி, இரண்டு நாள் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.
இதில் 60 -க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் (பில்டர்ஸ் மற்றும் ஃபிளாட் புரோமோட்டர்ஸ்) கலந்து கொள்கின்றன. வசதி படைத்தோர், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு ஏற்ற அடுக்குமாடி குடியிருப்புகள், உடனடியாக வீடு கட்டி குடியேற ஏதுவான மனைகள், நாளைய முதலீடுகளுக்கான வீட்டுமனைகள் கொண்ட நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.
இதில், பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் வாங்குவதற்கு ஏதுவாக, பாங்க் ஆஃப் பரோடா கடன் வசதி செய்து தருகிறது. இதுதவிர, மனைகள் வாங்குவது தொடர்பாக சட்டரீதியான ஆலோசனைகளும் கண்காட்சியில் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக ரியஸ் எஸ்டேட் தொடர்பான கலந்தாய்வு சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியிலிருந்து மதியம் 1.30 வரை நடத்தப்படுகிறது. இதில் துறைரீதியான நிபுணர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.
இந்தக் கண்காட்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் பாங்க் ஆஃப் பரோடா, எஸ்.எஸ்.எம் பில்டர்ஸ் -புரோமோட்டர்ஸ், அமர்பிரகாஷ், காசாகிராண்டே மற்றும் ஸ்ரீ நிதி நாலேஜ்பார்ட்னர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
அனுமதி இலவசம்: இந்தக் கண்காட்சியில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் விவரங்களுக்கு 95660 61555, 98849 07441 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.