தமிழ்நாடு

திமுக நிர்வாகி வெட்டிக் கொலை

கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக நிர்வாகி புதன்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.

DIN

கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக நிர்வாகி புதன்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.
வடலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44). 17-ஆவது வார்டு திமுக செயலர் இவர், உணவகமும், மதுபானக் கூடமும் நடத்தி வந்தார்.
அவரது மதுக் கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டல் விடுத்ததாம். ஆனால், ரவிச்சந்திரன் கொடுக்க மறுத்து விட்டாராம்.
இந்நிலையில் நெய்வேலி சாலையில் புதன்கிழமை இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவரை 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரவிச்சந்திரன் உயிரிழந்தார். வடலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT