மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 819 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ச.தமிழ்வாணன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: 31 மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. திருப்பூரில் 32 -ஆவது குறைதீர் மன்றம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் சொந்த கட்டடத்துக்காக தமிழக அரசு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் 12 தலைவர் பணியிடங்களும், 15 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில், 10 தலைவர்கள் பணியிடத்துக்கும், 12 மாவட்ட உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநில ஆணையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட 28 ஆயிரத்து 409 வழக்குகளில் 24 ஆயிரத்து 597 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மன்றங்களைப் பொருத்தமட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1 லட்சத்து 15 ஆயிரத்து 779 வழக்குகளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 819 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.