நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட முருகன். 
தமிழ்நாடு

முருகனிடம் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: மே 22-க்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள முருகனிடமிருந்து, செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மே 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள முருகனிடமிருந்து, செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மே 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகனிடமிருந்து கடந்த மார்ச் 25-ஆம் தேதி விலையுயர்ந்த செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதித் துறை நடுவர் அலிசியா வழக்கு விசாரணையை வருகிற மே 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து முருகன் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT