ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1100 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வறண்டு கிடந்த காவிரி ஆற்றில், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் ஓரளவுக்கு அதிகரித்துள்ளது.
இதில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் கடந்த இரண்டு நாள்களாக நொடிக்கு 700 முதல் 800 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அருவிக்கு வரும் தண்ணீர் நொடிக்கு 950 கன அடியாகவும், மாலையில் மேலும், சற்று கூடுதலாகி நொடிக்கு 1100 கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.
நீண்ட நாள்களாக வற்றியிருந்த ஆற்றில், மழையின் காரணத்தால் தண்ணீர் வருவதால், வழக்கமான நிறமின்றி, ஒகேனக்கல் அருவிக்கு செந்நிறமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.