உத்தரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் உத்தரமேரூர் பேரூராட்சியில் உள்ள மாதிரியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ க.சுந்தர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள் தூர்வாரி சீரமைக்கும் பணி திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரமேரூர் பேரூராட்சியில் உள்ள மாதிரியம்மன் கோயில் குளம் தூர் வரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் ஞானசேகரன், குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், நகரச் செயலாளர் பாரிவள்ளல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை, சுப்பைய்யா, தொ.மு.ச. சுந்தர் உள்ளிட்டோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.