தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிமம்: டிஜிலாக்கர் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

வாகன ஓட்டிகள் அசல் வாகன உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக டிஜிலாக்கர் வசதியை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

DIN

வாகன ஓட்டிகள் அசல் வாகன உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக டிஜிலாக்கர் வசதியை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசும், மத்திய போக்குவரத்துத் துறையும் இணைந்து டிஜிலாக்கர் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இதில் அசல் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். குறிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பதிவேற்றம் செய்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். உரிமங்களைச் சோதிக்கும் அதிகாரியிடம் செல்லிடப்பேசியில் உள்ள செயலியைப் பயன்படுத்தி அசல் ஆவணப்பதிவைக் காண்பிக்க முடியும்.
இந்த டிஜிலாக்கர் பயன்பாட்டைப் போக்குவரத்துக் காவல்துறையினரும் பயன்படுத்தினால் சோதனைக்கு உட்படும் நபர் காண்பிக்கும் ஆவணப் பதிவைச் சரி பார்த்துக் கொள்ள முடியும். இதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழக மோட்டார் வாகன சட்ட விதிகளில் டிஜிலாக்கரின் பயன்பாட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டுநர் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திராமல், டிஜிலாக்கர் மூலம் அசல் ஓட்டுநர் உரிமத்துக்கான ஆவணப் பதிவைக் காண்பிக்கும்போது போக்குவரத்துக் காவல் துறையினர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT