தமிழ்நாடு

அதிமுகவின் அனைத்து பிரச்னைகளுக்கும் செப்.12 பொதுக்குழுவில் தீர்வு: அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை

அதிமுகவில் இப்போது நிலவுகிற அனைத்து பிரச்னைகளுக்கும் வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என, தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்

DIN

அதிமுகவில் இப்போது நிலவுகிற அனைத்து பிரச்னைகளுக்கும் வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என, தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி பூரணமதுவிலக்கை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதை லட்சியமாகக் கொண்டு அதிமுக அரசு இயங்கி வருகிறது. இதன்படிதான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 500 மதுக்கடைகள், பின்னர் எடப்பாடி பழனிசாமி உத்தரவால் 500 மதுக்கடைகள் என ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. நீதிமன்றத்துக்கு சென்ற சிலரது நடவடிக்கையால் இப்போது சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்பதே அரசின் கொள்கை முடிவு.
இதேபோல, நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்பதும் அரசின் கொள்கை முடிவாகும். நிகழாண்டு மட்டும் விலக்கு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மத்திய அரசின் வார்த்தைகளை கேட்டு அவசரச் சட்டம் கொண்டு வந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் புதுதில்லியில் ஒரு வாரம் முகாமிட்டு அனைத்து அமைச்சகத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்துத் தேர்வுகளை எதிர்கொள்ளவும் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் உணர்வின் வெளிப்பாடாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி அவர்களது போராட்டத்தை கைவிடச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக அரசுக்கு எந்தவித ஆபத்துக்கும் இல்லை. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற 134 எம்.எல்.ஏ.க்களும் அரசை கலைக்கும் முடிவை விரும்பவில்லை. மேலும், முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் 48 மாவட்டச் செயலர்கள், 110 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். வரும் 12ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது. இக் கூட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வருகை தருவர். டிடிவி தினகரன், அதிமுக-வில் அணிகள், கருத்து மோதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இந்தப் பொதுக்குழுவில் நிரந்தரத் தீர்வு காணப்படும். செப்.12ஆம் தேதி பொதுக்குழுவுடன் அதிமுகவின் அனைத்து விவகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT