தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்து வரும் நிலையில், 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பரிசல்கள்.  
தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கன அடியாக உயர்வு

கர்நாடக நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வியாழக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

DIN

கர்நாடக நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வியாழக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் ஒரு வாரமாகவே தண்ணீர் வரத்தும் அதிகரித்திருக்கிறது.
கடந்த சனிக்கிழமை நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரம் கன அடியாகக் கூடியது. பிறகு, செவ்வாய்க்கிழமை மீண்டும் நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்தில் வியாழக்கிழமை நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

SCROLL FOR NEXT