தமிழ்நாடு

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி இருவர் சாவு

சிவகங்கை அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்க சென்ற இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

DIN

சிவகங்கை அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்க சென்ற இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
சிவகங்கை அருகே உள்ள பூவாளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (35), ரெங்கநாதன்(50), காயாங்குளத்தைச் சேர்ந்த வல்லவி என்ற ஆறுமுகம் (52),, செங்குளத்தை சேர்ந்த சேவியர் ஆகிய நால்வரும் அதே பகுதியில் உள்ள கண்மாயில் வியாழக்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 4 பேரும்,அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் ஆறுமுகம், வல்லவி என்ற ஆறுமுகம் ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த ரெங்கநாதன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேவியர் காயமின்றி தப்பினார். சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT