தமிழ்நாடு

செப்.10-இல் ஆளுநருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 10-ஆம் தேதி சந்திக்க உள்ளனர்.

DIN

ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 10-ஆம் தேதி சந்திக்க உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் திரும்பப் பெற்றனர். 
திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரைச் சந்தித்து, பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.-க்கள் சந்தித்து, பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கடிதம் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ஆம் தேதி ஆளுநரைச் சந்திக்க திமுக எம்.எல்.ஏ.க்களும் அனுமதி கேட்டுள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT