தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளி ஆசிரியை ராஜிநாமா

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தனது பணியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

DIN

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தனது பணியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
அரியலூர் மாணவி அனிதா உயிரிழப்பையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியையான சபரிமாலா, அதே பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் மகன் ஜெயசோழனுடன் புதன்கிழமை காலை பள்ளி முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்தக் கோரி, அவர் நடத்திய போராட்டம் குறித்து அறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி சபரிமாலாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்த சபரிமாலா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனிடம், தனது பணியை ராஜிநாமா செய்வதாகக் கூறி கடிதம் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT