பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என, முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் போப் கல்லூரி விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை தூத்துக்குடி வந்த முல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான சிந்தலக்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, சிந்தலக்கரையில் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.எ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அவர்களில் ஓ.எ. நாராயணசாமி, மாவட்டத் தலைவர் ஜெயகண்ணன் ஆகிய இருவரை மட்டும் முதல்வரிடம் மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர்.
இதையடுத்து, முதல்வரிடம் விவசாயிகள் அளித்த மனு விவரம்:
விவசாயிகளுக்கு 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. தற்போது விவசாயப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.