தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மாவட்டத்தின் பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்ற தன்னாட்சிக் கல்லூரி அறிவிப்பு விழா மற்றும் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் பி.ஏ. ஆறுமுகநயினார் இல்லத் திருமண விழா ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
இதற்காக, ஈரோட்டில் இருந்து கார் மூலம் வந்த அவருக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், சிந்தலக்கரையிலும், கோவில்பட்டி பேரவைத் தொகுதி சார்பில் குறுக்குச்சாலையிலும், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி சார்பில் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் சார்பில் தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் சாலையோரத்தில் நின்ற பொதுமக்களுடன் முதல்வர் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.