தமிழ்நாடு

ராகிங் விழிப்புணர்வு குறும்படம்: ஆளுநர் யோசனை

பெற்றோரிடமும், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ராகிங் பாதிப்புகள் தொடர்பான குறும்படம் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என ஆளுநர்

DIN

பெற்றோரிடமும், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ராகிங் பாதிப்புகள் தொடர்பான குறும்படம் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை வழங்கினார்.
மாநில அளவிலான ராகிங் தடுப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலைமையில் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி:
உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திரையரங்குகளில் திரையிடப்பட உள்ள ராகிங் கொடுமைகள் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது.
ஆளுநர் பாராட்டு: அதிகாரிகளின் இந்த முயற்சியைப் பாராட்டிய ஆளுநர், திரையரங்குகளில் மட்டுமின்றி இந்த ராகிங் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என ஆலோசனை வழங்கினார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT