முகப்பு
தமிழ்நாடு

பல்கலை. நியமன முறைகேடுகள் குறித்து முழு விசாரணை தேவை

பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக உயர் கல்வித்துறை பெருமளவில் சீர்கெட்டு இருப்பதையே, கோவை பாரதியார் பல்கலைக்கழக விவகாரம் எடுத்துக் காட்டுகிறது. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் தொடர்புடையவர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு பல்கலைக்கழக கல்வியின் தரத்தையும், மாண்புகளையும் சீர்குலைத்து வரும் இதுபோன்ற நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் அனைத்தின் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →