முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: முன்னாள் டிஜிபி ராமானுஜத்திடம் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. 
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவரது உதவியாளர், இல்லத்தில் வேலை செய்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ராமானுஜம்: இந்நிலையில், முன்னாள் டிஜிபி ராமானுஜம் விசாரணை ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார். கடந்த 2012-இல் ஓய்வுபெற்ற ராமானுஜத்துக்கு அதற்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 
அதிலிருந்து அவர் ஓய்வுபெற்ற பின் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 
பின்னர், அவருக்குத் தலைமைத் தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட்டது. 
இவ்வாறு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →