முகப்பு
தமிழ்நாடு

துறைமுக விரிவாக்கத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு: கரண் அதானி தகவல்

தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி 2019, 3:31 am IST
பகிர்:


தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.
மாநாட்டின் தொடக்க விழாவில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி பேசியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, எண்ணூர் துறைமுகத்தை கட்டி அமைத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகத்தை கட்டமைத்தோம். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 640 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் எங்களது முதலீடுகள் தொடரும். 
அந்த வகையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளோம் என்றார் கரண் அதானி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.