சிவகங்கை மாவட்டம், ஏரியூரைச் சேர்ந்த பகீரத நாச்சியப்பனின் மனைவி கெளசல்யா நாச்சியார் (86) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) காலமானார்.
கௌசல்யா நாச்சியாருக்கு கணவர் பகீரத நாச்சியப்பன் மற்றும் வழக்குரைஞர் இமையபரம்ப நாச்சியப்பன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகிய 2 மகன்களும், சாந்தி தேவராஜன் என்ற மகளும் உள்ளனர்.
சொந்த ஊரான ஏரியூரில் உள்ள இல்லத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் மோகன் நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கோட்டியாக் கடியாஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் திங்கள்கிழமை மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலையில் அதே பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.